19 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 74 ஆயிரத்து 361 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று மேலும் 21 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை 75 ஆயிரத்து 392 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது. நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 19 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 10 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்ட 135 பேர் கடலூர் மற்றும் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.