தமிழகத்தில் மேலும் 186 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 186- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இன்று நாளில் 186 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 98 ஆண்கள் மற்றும் 88 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 57 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும், கன்னியாகுமரியில் 15 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் என மொத்தம் 30 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை.