மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு

மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருடப்பட்டது.;

Update: 2023-10-13 20:00 GMT

மேலூர்

சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த தம்பதியர் கணேசன்-சங்கீதா. இவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கூத்தப்பன்பட்டி தென்றல் நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தமராக்கி சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ¾ பவுன் மோதிரம், ஒரு விலையுர்ந்த செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்