ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று

ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-19 20:31 GMT

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு தினமும் 10 பேருக்கும் கீழ் சரிந்து இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் உள்பட 81 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்