ஒரேநாளில் 18 அலுவலர்கள் திடீர் பணியிட மாற்றம்

அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-27 20:42 GMT


அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அருப்புக்கோட்டை நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பாலகிருஷ்ணன், செல்வராஜ், மகேஸ்வரி, சந்தி முத்து, வருவாய் உதவியாளராக பணியாற்றும் பாக்கியலட்சுமி, மணிகண்டன், பாலமுருகன், யோகேஷ் குமார், முனியசாமி, கண்ணதாசன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலக உதவியாளராக பணியாற்றும் காளிமுத்து, முருகேசன், சண்முகப்பிரியா, சேக் முகமது, சதீஷ் முருகன், பாண்டி, முத்து, காளிராஜ் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

18 பேர்

இதில் சண்முகப்ரியா மட்டும் சாத்தூர் நகராட்சிக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார். மற்ற அனைவரும் வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரேநாளில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 18 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்