இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி

இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி

Update: 2023-03-14 18:45 GMT

கோவை

கோவையை சேர்ந்த இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.18 லட்சம் மோசடி

கோவை போத்தனூர் சாய் நகரை சேர்ந்தவர் பரக்கத்துல்லா (வயது33). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சுல்தான் பேட்டையில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 14-ந் தேதி பரக்கத்துல்லா ஆந்திராவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இரும்பு கம்பிகள் வாங்குவதற்காக ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் ரூ.18 லட்சத்தை அனுப்பினார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பு அவர்கள் இரும்பு கம்பிகள் அனுப்பாமல் பணத்தை மோசடி செய்து விட்டனர். பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட போதும் நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்தனர்.

வழக்குப்பதிவு

மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது நிறுவனத்தை சேர்ந்த ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த சுரேஷ் (50) என்பவர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து பரக்கத்துல்லா போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்