18 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
18 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புகழூர் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் டீக்கடைகள், பலகாரக் கடைகள், ஓட்டல், பேக்கரிகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் சுமார் 18 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைககளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைககளை பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.