கன்னியாகுமரியில்18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல

கன்னியாகுமரியில்18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-11-21 22:07 GMT

கன்னியாகுமரி:

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அலுவலர்கள் தங்கசிவம், பிரவீன் ரகு, குமாரபாண்டியன், வின்சென்ட் கிளாட்சன், ரவி மற்றும் நாகராஜன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரியில் 49 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் கடைகளில் இருந்து 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பானிபூரி கடையில் சோதனையின் போது சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கடை அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்