தெற்கு பேய்க்குளத்தில்நாய் கடித்து 18 ஆடுகள் பலி
தெற்கு பேய்க்குளத்தில்நாய் கடித்து 18 ஆடுகள் பலியாகின.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). இவர் அங்குள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் அருகே கொட்டகை அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார்.
ேநற்று காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளை அனுப்புவதற்காக கொட்டகைக்கு அவர் சென்றார். அருகில் ெசன்று கொண்டிருந்தபோது ஆடுகளின் அபயக்குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிப்போய் பார்த்தார்.
அப்போது அங்கு நாய் கடித்து 18 ஆடுகள் இறந்து கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவர் அங்கு வந்து இறந்து கிடந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார்.