மாவட்டம் முழுவதும் 1,742 பள்ளிகள் திறப்பு

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1,742 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி கலெக்டர் வரவேற்றார்.

Update: 2022-06-13 19:58 GMT

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1,742 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி கலெக்டர் வரவேற்றார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 996 அரசு பள்ளிகள், 493 அரசு உதவி பெறும் பள்ளிகள், 253 தனியார் பள்ளிகள் ஆக மொத்தம் 1,742 பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தொடக்க நிலை வகுப்புகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

கலெக்டர் வரவேற்றார்

அரசு அறிவுறுத்தியபடி முதல் ஒரு வாரத்திற்கு மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் பள்ளிகள் திறந்ததையொட்டி கலெக்டர் மேகநாத ரெட்டி நேற்று விருதுநகர் முஸ்லிம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கியதுடன் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு அதற்கான கையேட்டினை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்