17 வயது சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது

அன்னூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-24 19:00 GMT

அன்னூர்

அன்னூர் பகுதிைய சேர்ந்தவர் தாமோதரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதேப்பகுதியை சே்ாந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களது எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் சிறுமி கர்ப்பமாக இருந்ததால் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அப்போது மருத்துவர்கள் சிறுமியின் வயதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாமோதரன் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்