17 நில அபகரிப்பு மனுக்களுக்கு தீர்வு

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு முகாமில் 17 நில அபகரிப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-31 20:17 GMT

நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு தொடர்பான மனுக்களை விரைந்து முடிக்க, கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

உதவி கலெக்டர் தமிழரசி, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சாவித்திரி, தனலெட்சுமி, முருகன் மற்றும் வருவாய், பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள், நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் 17 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்