மருந்து கடை ஊழியர் வீட்டில்17 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி உறையூர் மருந்து கடை ஊழியர் வீட்டில் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-20 19:10 GMT

திருச்சி உறையூர் மருந்து கடை ஊழியர் வீட்டில் 17 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருந்து கடை ஊழியர்

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் சிண்டிகேட் வங்கி காலனியை சேர்ந்தவர் கடற்கரைவேல் (வயது 63). இவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு ஜெர்மனியில் இருந்து ஊர் திரும்பும் தனது மருமகளை அழைத்து வர சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மீண்டும் அடுத்த நாள் மதியம் 12 மணி அளவில் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

17 பவுன் நகைகள் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்