மது விற்ற 17 பேர் கைது

தீபாவளியன்று மது விற்ற 17 பேர் கைது செய்யப்பட்டு 820 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்

Update: 2022-10-25 20:42 GMT

நெல்லை மாநகரில் நேற்று முன்தினம் தீபாவளியன்று மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது தெற்கு பைபாஸ் சாலை விஜயா கார்டன் அருகே சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டு இருந்த பாளையங்கோட்டை நாராயணர் தெருவை சேர்ந்த நாராயணன் (வயது 40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய அவர் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவர் பதுக்கி வைத்து இருந்த 481 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல் வீரமாணிக்கப்புரத்தை சேர்ந்த மாரியப்பன் (53) என்பவர் பதுக்கி வைத்து இருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

அதே போல் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் ரோந்து பணியின் போது தெற்கு பைபாசில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டு இருந்த திசையன்விளை விஜயநாராயணத்தை சேர்ந்த சிவக்குமார் (45) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 92 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் தீபாவளியன்று மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 223 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்