கடந்த ஆண்டில்விவேகானந்தர் மண்டபத்தை 17¾ லட்சம் பேர் பார்வையிட்டனர்

கடந்த ஆண்டில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17¾ லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Update: 2022-12-31 18:01 GMT

கன்னியாகுமரி:

கடந்த ஆண்டில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17¾ லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

விவேகானந்தர் மண்டபம்

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் விழாகாலங்களில் வழக்கத்தை விட அங்கு கூட்டம் அலைமோதும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகு இயக்கப்படுகிறது.

17¾ லட்சம் பேர் பார்வையிட்டனர்

கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் தடை செய்யப்பட்டிருந்தது.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு கொரோனா குறைவாக இருந்ததால் கன்னியாகுமரிக்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது.அதன்படி கடந்த ஆண்டில் ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17 லட்சத்து 81 ஆயிரம் பேர் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்