தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் 33 கே.வி.மின் பாதை பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 17-ந்தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்தார்.