163 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் அருேக 163 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தம்பதி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Update: 2022-07-07 21:04 GMT

விருதுநகர் அருேக 163 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தம்பதி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

விருதுநகர் அருகே ஏ. புதுப்பட்டி கிராமத்தில் புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சூலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா அந்த கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கியை விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 36) என்பவர் வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு வினியோகம் செய்து வருவது தெரியவந்தது.

5 பேர் கைது

அதன் பேரில் கிட்டங்கியில் இருந்த 163 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஜேசுராஜையும், அங்கு புகையிலைபொருட்கள் வாங்க வந்திருந்த விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் (36), மீசலூரைச் சேர்ந்த வடிவேலு (41), சூலக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (55) அவரது மனைவி கணேஸ்வரி (48) ஆகிய 5 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 784 ஆகும். இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்