16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

விழுப்புரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-06-04 14:50 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் செங்கல் சூளையில் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக உள்ளார். இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை விஜய் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்