16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
மதுரையில் 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரைஸ்மில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரையில் 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரைஸ்மில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
16 டன் ரேஷன் அரிசி
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அனுப்பானடி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 320 மூடையில் 16 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்தனர்.
3 பேர் கைது
பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மில் உரிமையாளர் கதிர்வேல்(வயது 43), லாரி உரிமையாளர் முத்துராஜா (32) மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் லாரியுடன் 16 டன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் அந்த அரிசி மூடைகளை வெளிமாவட்டத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.