வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை-ரூ.2.15 லட்சம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை-ரூ.2.15 லட்சம் கொள்ளை

Update: 2023-01-24 19:56 GMT

தஞ்சையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டின் கதவு உடைப்பு

தஞ்சை ஏ.வி.பி. அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அனிதாராஜ்(வயது 31).

இவர், கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார். மறுநாள்(22-ந் தேதி) வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

16 பவுன் நகைகள்-ரூ.2.15 லட்சம் கொள்ளை

மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

அனிதாராஜ் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் அங்கு வந்து வீ்ட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் அனிதாராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரமேஷ் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்