திருச்சி விமான நிலையத்தில் ரூ.16¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-08 17:20 GMT

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பயணியை சோதனை செய்தபோது, 255 கிராம் எடையுள்ள 2 தங்க சங்கிலிகள், தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 27 ஆயிரம் ஆகும். இதேபோல் மற்றொரு பயணியிடம் ரூ.21 லட்சம்து 88 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்