மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16½ லட்சம் நிதியுதவி

மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16½ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2023-06-11 18:30 GMT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதம மந்திரியின் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியில் ஈடுபடும் 44 பெண் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் விதை மூலதன நிதியுதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 51 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மூலதன நிதியுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர் இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்