தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 16 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 16 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Update: 2022-06-20 15:58 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பிளஸ்-2 தேர்வில் 16 அரசு பள்ளிக்கூடங்களும், 23 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 45 மெட்ரிக் பள்ளிக்கூடங்களும், ஒரு சுயநிதி பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டி உள்ளன.

இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 24 அரசு பள்ளிக்கூடங்களும், 21 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 55 மெட்ரிக் பள்ளிகளும், ஒரு சுய நிதி பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. இதுதவிர தமிழில் ஒரு மாணவியும், ஆங்கிலத்தில் 2 பேரும், கணிதத்தில் 53 பேரும், அறிவியலில் 67 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்