திருச்சி மாவட்டத்தில் 1,550 போலீசார் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-14 19:47 GMT


சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினம்

சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வழிபாட்டு தலங்கள், ரெயில்வே பாலங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ரெயில் நிலையம், விமான நிலையம் வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும், லாட்ஜ், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் இரவுநேரங்களில் போலீசார் சோதனை நடத்தவும், இரவு ரோந்தை அதிகப்படுத்தி வாகன சோதனை நடத்தவும், சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1,550 போலீசார்

இது தவிர, சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். சுதந்திர தினத்தையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் 1,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்