300 கிணறுகளில் விடப்பட்ட 1500 மீன் குஞ்சுகள்
300 கிணறுகளில் 1500 மீன் குஞ்சுகள்விடப்பட்டன;
தொண்டி,
திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் குமார் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி வழிகாட்டுதலின்படி மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, பூச்சியியல் அலுவலர் சேக் தாவுது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ் ஆகியோர் தலைமையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள 300 கிணறுகளில் 1500 மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் உம்முசலீமா நூருல் அமீன், சுகாதார ஆய்வாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உடனிருந்தனர்.