ஜமாபந்தியில் 150 மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 150 மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 6-வது நாளாக திருவண்ணாமலை தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி இன்று நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பொதுக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட மனுக்களை பெறப்பட்டன.
மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பிறப்பு சான்று, சிட்டா அடங்கல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் உதவி இயக்குனர் (நிலஅளவை பதிவேடு) சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் ரவி, தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழுமலை, யுவராஜ், மாதவன், ஜெயக்குமார், அனந்தகுமார், ஜெயலட்சுமி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வருவாய் ஆய்வாளர் தீபன்சக்கரவர்த்தி நன்றி கூறினார்.