150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், தஞ்சாவூர் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ராயவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த ராமு (வயது 50) என்பவர் மொபட்டில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, மொபட்டை பறிமுதல் செய்தனர்.