150 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் சுற்றி திரிந்த 150 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.;

Update: 2023-04-16 18:10 GMT

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதிக அளவில் இனவிருத்தி ஏற்பட்டு வருவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை நகராட்சி மூலம் பிடித்து மொத்தம் 150 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் போது நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர மன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதி குமார், சுகாதார அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் அனைத்தும் 2 நா்களுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்