வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் 15 பவுன் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி சாவித்திரி(வயது 53). இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபாா்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.