தென்னந்தோப்பில் சூதாடிய 15 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே தென்னந்தோப்பில் சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம்-கார் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-17 18:52 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே தென்னந்தோப்பில் சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம்-கார் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சில நாட்களாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சூதாடிய 15 பேர் கைது

அப்போது திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைக்காடு மேலதெருவை சேர்ந்த சந்திரன் மகன் பொன்ராஜ் (வயது32) என்பவர் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 40ஆயிரம் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள்,,ஒரு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 15 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்