திருமயம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மேலூர், வெங்களூர், பில்லமங்கலம் ஆகிய ஊர்களில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.