சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 15 பேர் கைது
சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் புலிகள் அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் அமைப்பினர் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாந்தோணிமலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக தமிழ் புலிகள் அமைப்பினை சேர்ந்த தாந்தோணி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்னுசாமி உள்பட 15 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.