காந்தி ஜெயந்தி அன்று மதுவிற்ற 15 பேர் கைது

காந்தி ஜெயந்தி அன்று மதுவிற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-03 19:21 GMT

காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின் படி மூடப்பட்டிருந்தன. இருப்பினும் சில இடங்களில் தடையை மீறி மது விற்கப்பட்டன. இதுதொடர்பாக திருச்சி மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் சகாயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடையை மீறி மது விற்றதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 289 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்