15 மதுபான கடைகள் மூடல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 மதுபான கடைகள் இன்று (வியாழக்கிழமை) மூடப்படுகின்றன.

Update: 2023-06-21 16:40 GMT

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்பட உள்ளது. இதில் வத்தலக்குண்டுவில் 2 கடைகளும், வடமதுரை, வேடசந்தூர் ஆகிய இடங்களில் தலா ஒரு கடையும், திண்டுக்கல் நாகல்நகரில் 2 கடைகளும், பழனி ரோட்டில் ஒரு கடையும், ஒட்டன்சத்திரத்தில் 2 கடைகளும், திண்டுக்கல் சத்திரம் தெரு, ரவுண்டு ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தலா ஒரு கடையும் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்