ரெயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-02-09 17:46 GMT

வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தன்பாத் விரைவு ரெயிலில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதிஷ்குமார் பஸ்வான் (வயது 25) என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் திருப்பூரில் வேலை செய்வதாகவும், அங்கு வேலை செய்யும் நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கடத்தி சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதேபோல் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்