வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தலைமைச் செயலாளர் உத்தரவு.

Update: 2022-06-26 22:22 GMT

சென்னை,

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை கவனிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மண்டலம் 1-க்கு சென்னை வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் சரவணகுமார் ஜத்வாத், மண்டலம் 2-க்கு தமிழ்நாடு சாலை திட்டம்-2-ன் திட்ட இயக்குனர் பி.கணேசன், மண்டலம் 3-க்கு சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மண்டலம் 4-க்கு சர்வே துறை இயக்குனர் டாக்டர் டி.ஜி.வினய், மண்டலம் 5-க்கு மாநில மனித உரிமை ஆணைய செயலாளர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், மண்டலம் 6-க்கு கால்நடைத்துறை துணை செயலாளர் ரஞ்சீத் சிங், மண்டலம் 7-க்கு சிறுபான்மை நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், மண்டலம் 8-க்கு ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் எஸ்.பழனிசாமி, மண்டலம் 9-க்கு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் கே.ராஜாமணி, மண்டலம் 10-க்கு நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் எம்.விஜயலட்சுமி, மண்டலம் 11-க்கு பள்ளிக் கல்வி இணைச் செயலாளர் டி.மணிகண்டன், மண்டலம் 12-க்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.நந்தகோபால், மண்டலம் 13-க்கு சிப்காட் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலம் 14-க்கு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன், மண்டலம் 15-க்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கே.வீரராகவ ராவ் ஆகியோரை நியமித்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்