நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலி

சின்னாளப்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியாகின.

Update: 2023-02-14 19:00 GMT

 சின்னாளப்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், அஞ்சுகம் காலனியை அடுத்த ரெட்டைகிணறு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பட்டி அமைத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவர், வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். 20 ஆடுகளை மட்டும் அவர் பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.

இந்தநிலையில் மதியம் 3 மணிக்கு மேல் மணிகண்டனின் தோட்டத்துக்குள் 3 நாய்கள் புகுந்தன. அப்போது அவை, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நாய்களை கம்பால் அடித்து விரட்டினர். மேலும் இதுகுறித்து மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறியடித்தபடி மணிகண்டன் தோட்டத்துக்கு வந்தார். அப்போது அங்கு நாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியாகி கிடந்தன. இதனை பார்த்து அவர் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பரிசோதனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்