1,000 இடங்களில் 15-ந்தேதி மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன..இவ்வாறு அவர் கூறினார்.