ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள்

தொப்பம்பட்டி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-31 20:37 GMT

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவு மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் அக்கரைப்பட்டி-சரவணப்பட்டி சாலை மேம்பாடு, மிடாப்பாடியில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா, மிடாப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர், வன்னியர்வலசில் தானிய கிட்டங்கி, புஷ்பத்தூர் வி.வி.நகரில் சமுதாயக்கூடம், தரைமட்ட தொட்டி திறப்புவிழா மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு எம்.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பொன்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், தமிழகத்தில் கரும்பு, வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பொருட்களுடன் கூடிய பரிசு தொகுப்புக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, பழனி தாசில்தார் சசி, ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணி (மரிச்சிலம்பு), ஈஸ்வரி ராமராஜ் (தொப்பம்பட்டி), வசந்தி கதிரேசன் (தும்பலப்பட்டி), தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, தாகிரா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்