மயானம் அமைக்க 15 ஏக்கரில் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றம்

மயானம் அமைக்க 15 ஏக்கரில் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றப்பட்டது.

Update: 2022-11-08 17:40 GMT

அணைக்கட்டு ஒன்றியம் சேர்பாடி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கான மயானம் சேர்பாடி ஆற்றின் மறுகரையில் உள்ளது. இறந்தவர்கள் உடலுடன் செல்பவர்கள் ஆற்றில் வெள்ளம் வரும்போது தண்ணீருக்குள் இறங்கி செல்ல சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ.ஆகியோரிடம் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதனையடுத்து ஆற்றுப்படுகையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின் வருவாய்த் துறையினருக்கு அரசுக்கு சொந்தமானபுறம்போக்கு நிலங்கள் இடம் உள்ளது. அங்கு மயானம் அமைக்க நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் சுதா, ராமலிங்கம் நில அளவு பிரிவை சேர்ந்த சர்வேயர்கள் சேர்பாடி பகுதிக்கு சென்று அளவிடு செய்தனர்.

அப்போது சுமார் 15 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள், கரும்பு பயிர்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் வேரோடு அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும்பணி இன்னும் 2 நாட்களில் முடிந்த பிறகு மயான பூமி சேர்பாடி கிராமத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்