தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி கிலோ ரூ.1,400-க்கு விற்பனை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. இதனால் பிச்சி ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-03-03 18:45 GMT

ஆரல்வாய்மொழி, 

அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. இதனால் பிச்சி ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு

நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் வருகின்றன.

அந்த பூக்களை குமரி வியாபாரிகள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் தினமும் காலையில் பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று திடீரென்று பூக்கள் விலை உயர்ந்தது.

பிச்சி கிலோ ரூ.1,400

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ ஒரு கிலோ நேற்று ரூ.1,400-க்கு விற்பனையானது. இதே போல் முல்லை ரூ.700-ல் இருந்து ரூ.1,300-க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

மல்லிகை ரூ.500, கனகாம்பரம் ரூ.300, அரளிப்பூ ரூ.200, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.60, சம்பங்கி ரூ.100, பட்டன்ரோஸ் ரூ.120, துளசி ரூ.40, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.100, மஞ்சள்கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.100, வெள்ளை சிவந்தி ரூ.120, ஸ்டெம்புரோஸ் ஒரு கட்டு ரூ.150, 100 தாமரை பூக்கள் ரூ.500, 100 ரோஜாப்பூக்கள் ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரியிடம் கேட்ட போது, 'அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி பிச்சிப்பூ தேவை அதிகம் இருந்தது. ஆனால் பிச்சிப்பூ வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்துள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்