எருது விடும் விழாவில் மாடு முட்டி 14 பேர் காயம்
கணியம்பாடியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி 14 பேர் காயம் அடைந்தனர்.
வேலூரை அடுத்த கணியம்பாடி கிராமத்தில் மயான கொள்ளையை முன்னிட்டு எருது விடும் விழா நடந்தது. காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 282 மாடுகள் பங்கேற்றது. பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர். விழாவில் மாடுகள் முட்டியதில் 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை, மேட்டுக்குடி, விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்தனர்.