குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 8 பேரும், மேல்புறம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் தலா 2 பேரும், அகஸ்தீஸ்வரம், குருந்தங்கோடு பகுதிகளில் தலா ஒருவரும் என 14 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் 13 பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார். இதுவரை குமரி மாவட்டத்தில் 84,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.