தமிழ்நாட்டில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-12-26 18:10 GMT

கோப்புப்படம் 

சென்னை,

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன், ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,170-ஆக அதிகரித்துள்ளது. கொனோனாவால் கர்நாடகாவில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்