போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.14½ லட்சம் நிதியுதவி
பணி காலத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.14½ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மல்லையா என்ற மல்லிசாமி பணிக்காலத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்தாரருக்கு அவருடன் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 250 நிதி திரட்டி அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர். இந்த நிதியினை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மல்லையாவின் குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.