சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவன ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்த அஜய் என்பவர் நேற்று சந்தேகத்திற்குரிய வகையில் உலா வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள், அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அஜய் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது கால் உறைக்குள் 4 பிளாஸ்டிக் கவர்களில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கத்தை அவர்ர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில் இலங்கையில் இருந்து வந்த நபர் தங்கத்தை கொடுத்ததாக தெரியவந்தது. தொடர்ந்து அஜய்யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.