மின்னல் தாக்கி 14 ஆடுகள் பலி

கடையம் அருகே, மின்னல் தாக்கி 14 ஆடுகள் பலியானது.

Update: 2023-04-30 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே பாப்பான்குளம் அடுத்துள்ள மலையான்குளத்தை சேர்ந்தவர் சன்னியாசி என்பவரது மகன் சுடலைமாடன். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். வழக்கம் போல் ஊருக்கு அருகே உள்ள பொத்தை பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆடுகளை தேடினார். அப்போது 14 ஆடுகள், மின்னல் தாக்கி இறந்து போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்