குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை

குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-09-28 19:05 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் குருநாத சுவாமிகளின் கோவில் உள்ளது. புரட்டாசி பவுர்ணமியைெயாட்டி குருநாத சுவாமிகளின் 138-வது ஆண்டு குருபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பெரிய ஏரிக்கரையில் இருந்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி மற்றும் அலகு காவடியை பக்தர்கள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்