10 மையங்களில் 13,877 பேர் எழுதினர்
விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வினை 10 மையங்களில் 13,877 பேர் எழுதினர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வினை 10 மையங்களில் 13,877 பேர் எழுதினர்.
எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது.
மாநில அளவில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற்றது.
மொத்தம் 16,739 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,862 பேர் தேர்வு எழுத வரவில்லை. 13,877 பேர் தேர்வு எழுதினர். நேற்று காலை 10 மணி முதல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது.
டி.ஐ.ஜி. ஆய்வு
தேர்வு மையங்களில் உரிய கண்காணிப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விதிமுறைப்படி காலை 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த சோதனைக்கு பின் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களில் தேர்வு நடைமுறை முற்றிலுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்திற்கு தேர்வு மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.