138 போலீசார் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 138 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-26 17:55 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த போலீசாரை வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட பணிமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் திருப்பத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 138 போலீசார் தாங்கள் பணிபுரிய விரும்பும் போலீஸ் நிலையம் குறித்து, காலி பணியிடங்களின் அடிப்படையில் விண்ணப்பம் அளித்தனர். அதன்படி விண்ணப்பித்த அனைவருக்கும் பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று பணியில் சேர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்